Posts

DEAR Program DINDIGUL

Image
Review of the DEAR Program Date: 21.08.2025 Venue: Kumaran Park - Dindigul     Drop Everything And Read      There were 108 students with the teachers had participated in the DEAR program from different schools of Dindigul District. Totally 45 minutes has given to them to read the story which is already given to them. After 45 minutes we had a review session by sitting together all the 108 students,  teachers and the observers.      Really I was  very excited to hear their feedback because it was completely different reading program where they could read without any condition that is under the roof of four walls of the class room.      Two students from each school came forward and shared their reading experience. The first thing they shared about what they read(story) in the given paper , they talked about few things from the story and they shared about the l...

இறை படைப்பின் அபூர்வம்

Image
           மதிய உணவு இடைவேளையில் பசுமையும் அழகும் நிறைந்த பள்ளி ஒன்றில் நுழைந்தேன். வரிசையாக அமர வைக்கப்பட்டு குழந்தைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்த நேரம் அது. எனக்காக காத்திருந்தது போல் " நல்லாருக்கியா நீ" என்ற குரல் கேட்க, யாரது என்று கால்களுக்கு ஓய்வு கொடுத்து நின்றேன். என் சேலையை பிடித்தவாறு மீண்டும் "நல்லாருக்கியா நீ" என்ற குழந்தையின் அருகில் அமர்ந்து, தலையைத் தடவி "நான் நல்லாருக்கேன், நீங்க எப்டி இருக்கீங்க" என்று நான் கேட்டதும்,  அந்த குழந்தையின் முகத்தில் நான் கண்ட மகிழ்ச்சி வார்த்தைகளில் இங்கு வடிக்க இயலாது என்றாலும் கூட, அந்த நேரம் மீண்டும் தாய்மை பேற்றை அடைந்துவிட்ட ஆனந்தம் என்னுள்ளே. ஆனந்தத்தை இன்னும் கொஞ்சம் வாங்கிக்கொள் என்பது போல், " நீ சாப்டல இல்ல ஆ சொல்லு ஊட்டி விடுறேன்" என்று ஊட்டும் சோறு சிந்தாமல் இருக்க என் தாடை பிடித்து அவள் ஊட்டிய நான்கு பருக்கைகள் நிறைந்த அந்த சோறு அமிர்தமாய் தித்தித்தது என் நாவினில். அமிர்தம் உண்டதில்லை அந்த பாக்கியம் கிடைதது விட்டதாய் உணர்ந்தேன் அந்த நொடி.          ஆயிரங்கள் சம்பாதித...

தனிமைப் பயணம்

ஒரு நூறு பட்டாம்பூச்சிகள்  புதிதாக சிறகு முளைத்து  பறக்கும் பூரிப்பு என்னுள்ளே ஒவ்வொரு முறையும்  உன்னோடு பயணித்த நாட்களில் இன்று சிறகொடிந்த பறவையாய்  தனிமைப் பயணம்  உன் விழி பார்த்து பார்த்த வாரத்தையற்ற  உன் குறுநகையில் என்னைத் தொலைத்து  உன் விரல் பிடித்து விளையாடி உன் தலைகோதி  செல்லக்கடி கடித்து  உன் மார்பின் மஞ்சத்தில் தலை சாய்த்தவள்  இன்று அனாதையாய்  உயிரற்ற அலைபேசியில்  உன் பெயரை மட்டும் தடவிப் பார்த்துக் கொண்டு நிமிடங்களைக் கரைக்க  நினைக்கிறேன் கல்லென கரைய மறுக்கிறது  இந்த நிமிடங்கள் கூட  உன்னருகிருந்து  நீ ஊட்டிய அமிர்தத்தில் அகம் மகிழ்ந்த நொடிகள்  கண்முன் நிழலாட இன்று தனிமையில் தண்ணீரும்  தொண்டைக்குள் செல்ல  மறுக்கின்றன  உன் செவ்விதழ்கள்  ஒத்தடம் தந்த இடம் -இன்று  கண்ணீரைக் கடன் வாங்கி கொண்டன என் தேவையறிந்து  உன் தூக்கம் தொலைத்து  பேருந்து இடைநிற்றலில்  தேநீரோடு வருவாயே  நீயின்றி ஏன் இந்த  தனிமைப் பயணம்  ஏன் என்னோடு  வரவில்லை?  நிலவ...

பேருந்து அனுபவம்

தினம் கடக்கும் பேருந்து பயணத்தில் இன்று நான் கடந்து வந்த ஒரு நிகழ்வு. மதுரையில் இருந்து திண்டுக்கல் வரும் பேருந்தில், பேருந்து நிலையத்திற்கு முன்பாகவே ஒரு நிறுத்தத்தில் இறங்கி அடுத்த பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதால் வேகமாக இறங்கி, ஓட்டமும் நடையுமாகச் சென்று, திண்டுக்கல்லில் இருந்து திருச்சி நோக்கிச் செல்லும் அரசு பேருந்தில் பின் வாசல் படியில் நான் ஏறிய பொழுது, ஒரு குரல் என் காதில் ஒலித்தது. "அந்த இருக்கையில் அமர வேண்டாம்; அதில் நான் இடம் போட்டு இருக்கிறேன்" என்பதுதான் அந்த குரல். "சரிங்க அம்மா" என்று சொல்லிவிட்டு வேறு ஒரு இருக்கையில் நான் அமர்ந்தேன். மீண்டும் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் ஏறுபவர்களிடமும் அதையே சொல்லிவிட்டு, அந்த அம்மாவும் அவரது கணவருமாக சேர்ந்து இரு வயதானவர்கள் வருவார்கள் அவர்களால் வெகு தூரம் நிற்க முடியாது என்பதால் தான் சொல்கிறோம் என்றார்கள். அதைக் கேட்ட நான் சற்று மனம் நெகிழ்ந்தேன். பரவாயில்லை வயதானவர்களையும் அவர்களின் உடல் நிலையையும் பற்றிச் சிந்திக்கும் அளவிற்கு மனித மனங்கள் இங்கு பரந்து கிடக்கின்றன என்று உள்ளூர மகிழ்ந்தேன். எல...

கவிதை

பறக்க முடியாமல்  என் சிறகுகள் கனக்கும் போதெல்லாம்,  காற்றும் கூட   கிளையசைத்து  தன் உயிர்ப்பை  மெய்ப்பிக்கிறதே  கடலலை கூட  கரை தீண்டித்தீண்டி  தன் இருத்தலை  உணர்த்துகிறதே  இயற்கையின் படைப்பில்  இணையற்றவள் நீயல்லவா  இந்த வரிகள்  மனசின் மர்மக் குழியில்  மெல்ல மெல்ல ஊசலாட  சிறகுகளின் கனம்  கரையக்கரைய  பறக்கிறேன் பருந்தென மீண்டும்.....

நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் - வாசிப்பு அனுபவம்

Image
*நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள்*           ✍️நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் என்ற புத்தகத்தை சில தினங்களுக்கு முன் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதை ஒரு வாய்ப்பாக பார்த்த எனக்கு வாசித்த பின் தான் இது எனக்குக் கிடைத்த வரம் என்று புரிந்தது.      ✍️வருடத்தின் 365 நாட்களில், சுதந்திர தினம், குடியரசு தினம், ராணுவ தினம் என்று சில தினங்கள் மட்டுமே நாட்டையும் நாட்டைக் காக்கும் ஒப்பற்ற பணியை செய்து வரும் ராணுவ வீரர்களையும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களையும், அவர்களின் தியாகச் செயல்களையும் நினைத்து வீரவணக்கம் செய்துவிட்டு கடந்து விடுகிறோம். இந்த புத்தக வாசிப்பு ராணுவ வீரர்கள் சில தினங்கள் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று உள்ளுணர்வை என்னுள் ஏற்படுத்தியது.        ✍️சின்ன சின்ன வலிகளையும் தாங்க இயலாது, உறவுகளுக்குள் கூட விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு மத்தியில், பல ஆண்டுகளாகப் பெற்றோரைப் பிரிந்து, மனைவ...

மகளிர் தின வாழ்த்துகள்

Image
வஞ்சியவள்வரமே!!!    🌺அழகில் தேவதையாய்  அன்பின் ஆரம்பமாய்  வீரத்தின் விதையாய்  தீரத்தின் திமிராய்  மழைச் சாரலாய்  சீறும் புயலாய்  கிழக்குச் சுடர் வானமாய் புகழ்மிக்க திருத்தலாய்  இந்த வஞ்சியவள் வரமே!!!!  🌺ஒரு துளி உயிரணுவைப் பெற்று  உதிரத்தால் உருமாற்றி   உருவாக்கும் உயர் வித்தகி  ஈரைந்து மாதங்கள் கருவினில்  மிச்சகாலமெல்லாம்  மார்புக்கூட்டினுள் வைத்து மகிழ்ந்திருக்கும் தவம்  இந்தவஞ்சியவள் வரமே!!!!   🌺அன்பெனும் வார்த்தைக்கு  அகராதி தந்து  அதீத சக்தியால்  அகிலம் ஆளும் அத்தியாயம்  வெயில் மழை பாராது  கல்லும் முள்ளும் கடந்து  துன்பங்களை தூசியாக்கும்  வல்லமை  இந்தவஞ்சியவள் வரமே!!!!  🌺வாடி நிற்பவர்களுக்கு  வாழ்க்கை விடியல்களை  பிரசவிக்கும்  சுடர் மிகு வைகறை வானம்  பொல்லார் கொடுமை  கண்டு பொங்குகையில்  புயலைக்கூட தோழனாக்கும்  பூமகள்  இந்தவஞ்சியவள் வரமே!!!!  🌺துணைகண்டு மனைகண்டு  மண்ணில் மகளிர் ம...