Posts

Showing posts from July, 2022

தேசிய காகித பை தினம் ஜீலை 12- 2022

Image
தேசிய காகித பை தினம் ஜீலை 12  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மம்மானியூர், வடமதுரை ஒன்றியம்,  திண்டுக்கல் மாவட்டம்.              ஜீலை 12 - 2022  இன்று எம் பள்ளியில் தேசிய காகித பை தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெகிழி பயன்பாட்டால் அன்னை பூமி தொடர்ந்து மாசுபட்டு வருவதையும், அதற்கு மாற்றாக நிச்சயமாக நம்மால் காகித பைகளை பயன்படுத்தி நம்மையும் நம் பூமியையும் பாதுகாக்க முடியும் என்பதை மாணவர்களிடம் சில தகவல்கள் மற்றும் காணொளிகள் மூலம் விளக்கப்பட்டது.  நெகிழி யின் அநாவசியத்தையும் காகித பைகளின் அவசியத்தையும் உணர்ந்து கொண்ட எம் பள்ளி மாணவர்கள் நெகிழி இல்லா பூமியை உருவாக்கும் முயற்சியில் காகித பைகள் தயாரித்து எல்லோரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.            மாணவர்கள் காகித பை செய்வதற்கு தேவையான அனைத்து  பொருட்களும் கொடுக்கப்பட்டது. ஆசிரியர் சொல்லச் சொல்ல  மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தனர். இதில் 7ம் வகுப்பு படிக்கும் இருபது மாணவர்கள் கலந்து கொண்டனர். ...