Posts

Showing posts from May, 2021

என் அன்னைக்கு சமர்ப்பணம்

Image
 ❣️என் அன்னைக்கு ஒரு தினம்  அன்னையர் தினம்   ❣️அழகில் தேவதை - நீ  அன்பின் ஆரம்பம் - நீ  அடக்கத்தின் அந்தம் - நீ  வீரத்தின் விதை-  நீ  தீரத்தின் திமிர்-  நீ   ❣️உன் புகழ் சொல்லிட  ஒருநாள் போதாது  என் அன்னையே ! ❣️உனக்கோர் கவி மாலை தொடுத்திட  கடலிடம் சென்று முத்துக்கள்  கடனாய்க் கேட்டேன்  வானத்திடம் சென்று விண்மீன்கள் கடனாய்க் கேட்டேன்  காற்றிடம் சற்று கானம்  கடனாய்க் கேட்டேன் பூமாதேவியிடம் சில வைரங்கள்  கடனாய்க் கேட்டேன்  அனலிடம் அக்னியின் மணம்  கடனாய்க் கேட்டேன்  பஞ்ச் பூதங்களிடமும்  கடன் பெற்றேன்  போதவில்லை அம்மா  உன் புகழ் மாலை புனைந்திட ! ❣️ஒரு துளி உயிரணுவைப் பெற்று  உதிரத்தால் உருமாற்றினாயே  உதிரத்தையே உணவாக்கினாயே  எத்தனை பெரும்  அற்புதம் செய்தவள் நீ ! ❣️எனை சுமப்பது வலி  என்று தெரிந்தும்  கோவில் , குளம் ஏறி  வரம் பெற்று வலியறியாமல்  வயிற்றில் பத்து மாதமும்  மார்புக்கூட்டினுள் மிச்சக்காலமும்  ...

நட்பெனும் உறவு தந்த என் இனியவளுக்கு

Image
🌹 🌹புத்தம் புது காலை புரியாத மொழி பேசும்  புது முகங்களுக்கு மத்தியில்  மருண்ட விழிகளோடு  நின்ற எனக்கு  பல வருடம் பரிட்ஷையம் போல்  உன் முகம் மட்டும் ! 🌹எண்ண அலைகள்  நம்மை இழுத்திட  நட்பெனும் உறவாடிக்  கொண்டோம்  முதல் நாளிலே ! 🌹உன்னருகிருந்த நாட்கள்  விரல் விட்டு எண்ணிடும்  முப்பது நாட்களே ஆனால்  ஒரு ஜென்ம பந்த உணர்வு ! 🌹பற்கள் அத்தனையும் தெரிய  பளிச்சென நீ சிரிக்கும்  கள்ளமில்லா சிரிப்பில்  எத்தனையோ முறை  கரைந்திருக்கிறேன் ! 🌹மடைதிறந்த வெள்ளமென  படபடவென பட்டாசு போன்ற  உன் பேச்சில் பலமுறை  மெய்சிலிர்த்து நின்றிருக்கிறேன் ! 🌹என்னிலும் இளையவள் நீ  வயதில் மட்டுமே  வாழ்க்கை அனுபவத்தில் அல்ல ! 🌹ஆடலும் உனக்கு அத்வைதம்  பாடலும் உனக்கு பரிட்ஷையம்  பட்டிமன்றத்தில் நீ ராணி  புரட்சிக் கருத்தில் நீ பாரதி நவீனத்தில் நீ வித்தகி  பள்ளியில் நீ தனிப்பெரும் தலைவி ! 🌹என் உடல் பலவீனத்தில்  தாயின் அரவணைப்பை  உன்னிடம் கண்டேன் ! 🌹காலில் காயம் பட்டபோது ...