பறவையாய் பறந்த முதல் விமான பயணம்
✈️விமானப் பயணம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பயண அனுபவங்களை பாடமாக பலரும் சொல்லிட பார்த்து பார்த்து செய்த முன் தயாரிப்புகள் ஏராளம் ✈️எதிர்பார்த்த அந்த நாள் சிங்கார சென்னையில் தாம்பரம் ரயில் நிலையம் ஆசையாய் வரவேற்க கைகள் சேர்த்துக் கொண்டோம் என்னவளும் நானும் ✈️எங்களுக்கான நட்பு தொடங்கி ஓராண்டு காலம் கடந்த ஆண்டு அவளோடு முதல் சந்திப்பு இதே நாளில் தான் ✈️ஆண்டு ஒன்றை கடந்து விட்டோம் நட்பின் ஆழம் கண்டு விட்டோம் கடவுள் தந்த மாபெரும் வாய்ப்பு அதே நாளில் அவளோடு அழகான விமான பயணம் இந்த ஆண்டு ✈️இருவருக்கும் இதுவே முதல் விமான பயணம் விமான நிலைய நுழைவாயில் தொடங்கி விமானத்தின் இருக்கை வரையில் அத்தனை சரிபார்ப்புகளையும் புதுவித அனுபவமாக பார்த்து பழகினோம் ✈️இதோ விமானம் மெல்ல மெல்ல இறகு அசைத்து இதமாய் தன் ஓடுபாதையில் வலம் வந்த காட்சி கண்களுக்கு விர...