Posts

Showing posts from June, 2021

கொரானாவின் கோரத்தில் சிக்கிய ஒரு உயிரின் உண்மைக் கதை

Image
🩸தாயின் அரவணைப்பில் பாலூட்டி சீராட்டி வளர்க்க  வேண்டிய பிள்ளை சூழ்நிலையால் தாய்மாமன்  வீட்டில் விடப்பட்டான்  🩸பிழைப்புக்காய் பெற்றோர்  அண்டை மாநிலம் செல்லவே  அன்பு ,பாசம், அக்கறை , அரவணைப்பை இழந்தவனாய்  இரண்டு வயது முதல்  தன்னிச்சையாக  வளர ஆரம்பித்தான்  🩸தன்னிலை தன் பிள்ளைக்கு  வேண்டாம் என  பெற்றோர் நினைக்கவே  தாய்மாமன் வீடே  நிரந்தரமானது  🩸நாளொரு மேனியும்  பொழுதொரு வண்ணமுமாக அரசுப் பள்ளியும் , ஆசிரியர்களும்  வளர்த்தெடுக்கவே  படிப்பு ,பண்பு ,விளையாட்டு என அனைத்திலும்  பெற்றோரும்,  வளர்த்தவர்களும்  பள்ளியும்,  ஊராரும்  பெருமைப்படும் வகையில்  கெட்டிக்காரனாய் வளர்ந்தான்  🩸பட்டாம்பூச்சியாய் சிறகடித்து  பறக்க வேண்டிய  பள்ளிப் பருவத்தில்  சில நேரம் வீட்டுச் சமையலும்  அவனுடையதே  அதிகாலை எழுந்து  ஓட்டமும் நடையுமாய்  ஓடிச்சென்று  ஐந்து ரூபாய்க்கும்  பத்து ரூபாய்க்கும்  தோட்டத்து வேலை செய்து  மீண்டும் ஓடி வந...