மனதில் நின்ற ஆசான்
மெல்ல என் விரல் பிடித்து அருகில் அமர்ந்து தலை வருடி ஏன் இத்தனை பயம் என்ற ஒற்றைக் கேள்வியில் - என் மருண்ட விழிகள் மாறி தாயன்பைக் கண்டேன் முதல் முறை தாயாய் மாறிவிட்ட என் ஆசிரியர் உன்னால் இது முடியாதென்றால் வேறு யாரால் முடியுமென்று தோழியாய் நொடி தோறும் என்னைத் தட்டிக் கொடுத்த என் ஆசானின் வார்த்தையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த நான்- இன்று அரசுப் பள்ளி ஆசிரியராக பல்வேறு பணிகளில் என் தாயுமான ஆசிரியரோடு இணைந்து பயணிக்கையில் என் வளர்ப்பு இவள் என்று என் ஆசிரியர் ஊர் முழுக்க சொல்லி நெஞ்சம் நெகிழும் தருணம் என்னைப் போன்ற வரம் பெற்றவள் யாருமில்லை என் உணர்ந்த பொழுதுகள் மகிழ்வாய் ..... என் தாயுமான ஆசிரியர் திருமதி. சோனியாவுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் 💐