நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் - வாசிப்பு அனுபவம்
*நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள்* ✍️நாட்டைக் காக்கும் நல்லுயிர்கள் என்ற புத்தகத்தை சில தினங்களுக்கு முன் வாசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதை ஒரு வாய்ப்பாக பார்த்த எனக்கு வாசித்த பின் தான் இது எனக்குக் கிடைத்த வரம் என்று புரிந்தது. ✍️வருடத்தின் 365 நாட்களில், சுதந்திர தினம், குடியரசு தினம், ராணுவ தினம் என்று சில தினங்கள் மட்டுமே நாட்டையும் நாட்டைக் காக்கும் ஒப்பற்ற பணியை செய்து வரும் ராணுவ வீரர்களையும், எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களையும், அவர்களின் தியாகச் செயல்களையும் நினைத்து வீரவணக்கம் செய்துவிட்டு கடந்து விடுகிறோம். இந்த புத்தக வாசிப்பு ராணுவ வீரர்கள் சில தினங்கள் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல தினந்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் என்று உள்ளுணர்வை என்னுள் ஏற்படுத்தியது. ✍️சின்ன சின்ன வலிகளையும் தாங்க இயலாது, உறவுகளுக்குள் கூட விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் சில மனிதர்களுக்கு மத்தியில், பல ஆண்டுகளாகப் பெற்றோரைப் பிரிந்து, மனைவ...