கணினி உலகம்
🌍நவநாகரீகத்தின் காவியத்தலைவனுக்கு ஒரு நன்றி சமர்ப்பணமாய் ... 🌍அன்றொரு காலத்தில் மேலைநாடுகளில் மட்டும் சிங்காரமாய் வலம் வந்த உனை எட்டிப் பிடிக்க நினைத்த எங்களின் கனவுகளுக்கு சிறகுகள் தந்ததின் விளைவாய் கனவு உருவம் நனவாகி இன்று பட்டி தொட்டியெல்லாம் பவனி வருகின்றாய் கம்பீர நடைபோட்டு கணினி என்னும் பெயரில் .. 🌍இனம், மொழி தாண்டி இதயங்கள் மட்டுமல்ல கடல் கடந்து கண்டங்களும் இணைந்து உலகமே உம் ஒற்றைக் குடையின் கீழ் இணைந்து நிற்பது நீ தந்த இணையமெனும் இணைப்பாலே !! 🌍முகம் தெரியாத உறவுகளுடன் உள்ளத்து எண்ணங்களை பக்குவமாய் பகிர்ந்திட முகநூல் தந்தாய் !! 🌍பரந்து விரிந்த பாரவையும் இன்று கணினியெனும் உன் சிறு பெட்டிக்குள் அடக்கி விட்டாயே !! 🌍நீ இன்றி ஏதுமில்லை நீ இல்லாத துறையும் எதுவுமில்லை மருத்துவம் தொடங்கி மளிகைக்கடை வரை உன் ஆட்சியே !! கோட்டை தொடங்கி குக்கிராமம் வரை ஆள்வதும் நீயே !! 🌍பல்துறைகளில் பய...