புத்தாண்டே வருக !! வருக!!
🌺🌺🌺கருங்குயில் கானம் பாட புல்லாங்குழல் பூபாளம் இசைக்க எழில்மிகு மயிலினங்கள் நடனமாட வண்ணம் கொண்ட பட்டாம்பூச்சிகள் சிங்கார சிறகசைக்க கொட்டும் பனிமழையிலும் மலைச் சாரல் மெல்ல வந்து தாலாட்ட கடலைகள் அள்ளி அணைத்திட ஆதவன் கதிர் வீசி அழைத்திட குழந்தைகள் குதூகலமாய் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்திட இயற்கை அன்னையின் இன்பமான அழைப்பினில் இதமாய் மகிழ்ந்திருக்க உனை வாழ்த்தி வரவேற்கிறோம் புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐 🌺🌺🌺பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதில் எள்ளளவும் ஐயமின்றி பழைய சிந்தனைகள் களைந்து புதிய சிந்தனைகள் எங்களில் பிறந்திட மனசெல்லாம் மத்தாப்பு பூக்கள் பூக்க மனதார உன்னை வரவேற்கிறோம் புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐 🌺🌺🌺மதங்கள் கடந்து மனங்களை நேசிக்கும் மானிட பண்பு இங்கு பெருகி திரும்பும் திசையெங்கும் மனித நேயம் மலர்ந்திட மகிழ்வோடு உன்னை வரவேற்கிறோம் புத்தாண்டே வருக வருக !!! 💐💐?...