Posts

Showing posts from September, 2021

என் செல்ல மகளுக்கு.....

Image
மகள்கள் ❣️ தின வாழ்த்துகள் 💐💐  என் அன்பு மகளுக்கு  மகள்கள் தின வாழ்த்துகள்... ❣️எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை  வரமாய் ஒருத்தி  எனக்கு வாய்த்தாள்  மகளெனும் வரமாய் !!!!! ❣️புத்தம் புதிதாய் பூத்த பூ இவள்  வாடா மலராய் வந்த வசந்தம் இவள்  புன்னகைமாறா பூ மகள் இவள்  ❣️பகலில் பகலவனின் ஒளி இவள்  இரவில் வெண்ணிலாவின்  பிரகாசம் இவள்   என் வாழ்வின்  அர்த்தமாய் வந்தவள் இவள் ❣️ஐந்து வருடங்கள்  மருத்துவத்தோடு போராட்டமா  விதியோடு போராட்டமா  தெரியவில்லை  போராட்டங்கள் பல கடந்து  நான் பெற்றெடுத்த  பொக்கிஷம் இவள்!!!! ❣️என் செல்ல மகள் பிறந்தாள்  எங்கள் வீட்டு மகாலஷ்மியாய் !!! அதனாலே அவளுக்கு  மகாலஷ்மி என்று பெயரிட்டேன்  ❣️பாசத்தில் இவள் போல்  எவரும் இல்லை  என் வீட்டு இளவரசியும் இவளே!!! என் மனம் ஆளும்  மகாராணியும் இவளே!!! ❣️உன் அழுகுரல் கேட்கும் முன்னே  உனை அள்ளி அணைத்து  அமுதூட்டிய நாட்கள்   நீங்காத நினைவுகளாய்....  ❣️தட்டுத்தடுமாறி நீ எழுகையில்...

கடிதத்தின் நேசம்

கடிதம் எனும் கானல் நீர்...... ✍️கடிதம்   சிறகு முளைத்த பந்து  இறகு முளைத்த இதயம்  கடிதம் காகிதம் அல்ல  வாழ்வின் அங்கமான  காலங்கள் நினைவுகளாய்!! ✍️கடிதம்   காதலர்களுக்கு  அன்பு பரிமாற்றம்  விடுதி மாணவர்களுக்கு  பெற்றோரின் பாசப் பகிர்வு  நட்பு வட்டங்களுக்கு  எல்லாமும் பகிர்ந்திடும் நாளிதழ்  உறவுகளை உள்ளன்போடு  இணைத்திடும் உறவுப்பாலம்!! ✍️ கடிதம்  பலநேரம் ஒப்பனைகளோடு  அழகான கையெழுத்தால்  அலங்கரிக்கப்பட்ட மலர்மாலை  சில நேரம்அவசரகதியில்  அர்த்தம்  மட்டுமே  விளங்கிக் கொண்டால்  போதும் என கிறுக்கிடும்  மழலைக் கீறல்கள் !! ✍️கடிதம்   நிச்சயம் முடித்துச் சென்ற  மணமக்களின் ஏக்கங்களுக்கும்  தவிப்புகளுக்கும்  மயிலிறகால்   வருடிச் செல்லும்  அற்புத மருந்து !! ✍️அன்று  இன்செய்தி கொண்டு வரும்  அஞ்சல்காரரைக்  கட்டி அணைத்துக்  கொண்ட காலம்  துன்ப செய்தியில்  அஞ்சல்காரின்  விரல் பிடித்து  தோல் சரிந்து  ஆறுத...