நட்பெனும் உறவு தந்த என் இனியவளுக்கு
🌹🌹புத்தம் புது காலை
புரியாத மொழி பேசும்
புது முகங்களுக்கு மத்தியில்
மருண்ட விழிகளோடு
நின்ற எனக்கு
பல வருடம் பரிட்ஷையம் போல்
உன் முகம் மட்டும் !
🌹எண்ண அலைகள்
நம்மை இழுத்திட
நட்பெனும் உறவாடிக்
கொண்டோம்
முதல் நாளிலே !
🌹உன்னருகிருந்த நாட்கள்
விரல் விட்டு எண்ணிடும்
முப்பது நாட்களே ஆனால்
ஒரு ஜென்ம பந்த உணர்வு !
🌹பற்கள் அத்தனையும் தெரிய
பளிச்சென நீ சிரிக்கும்
கள்ளமில்லா சிரிப்பில்
எத்தனையோ முறை
கரைந்திருக்கிறேன் !
🌹மடைதிறந்த வெள்ளமென
படபடவென பட்டாசு போன்ற
உன் பேச்சில் பலமுறை
மெய்சிலிர்த்து நின்றிருக்கிறேன் !
🌹என்னிலும் இளையவள் நீ
வயதில் மட்டுமே
வாழ்க்கை அனுபவத்தில் அல்ல !
🌹ஆடலும் உனக்கு அத்வைதம்
பாடலும் உனக்கு பரிட்ஷையம்
பட்டிமன்றத்தில் நீ ராணி
புரட்சிக் கருத்தில் நீ பாரதி
நவீனத்தில் நீ வித்தகி
பள்ளியில் நீ தனிப்பெரும் தலைவி !
🌹என் உடல் பலவீனத்தில்
தாயின் அரவணைப்பை
உன்னிடம் கண்டேன் !
🌹காலில் காயம் பட்டபோது
என் கால் தாங்கி
எனக்காகவும் நீ நடந்தாயே
மறந்திடுவேனா
மரணம் மட்டும் !
🌹வடிகின்ற கண்ணீரை துடைக்க
நீ வந்த போது
இது போதும் எனக்கு
என்றெண்ணியது உண்டு!
🌹சோர்ந்து நின்ற நேரங்களில் என்
பலத்தை பட்டியலிட்டு
தேற்றினாயே
நினைக்காமல் நித்திரை
கொள்வேனா !
🌹என் நெஞ்சம் வாழும்
ஆசானையும்
தோற்கடித்து நின்றாய்
வாழ்க்கை பாடம்
கற்றுத் தந்ததில் !
🌹சொல்லிக் கொள்ளாமலே
ஒரே வண்ண ஆடையில்
வலம் வந்த நாட்களிலெல்லாம்
நினைத்துக் கொண்டேன்
நம்மில் எத்தனை
ஒற்றுமை என்று
🌹உன் நிழல் படும்
தூரத்தில் இருந்த
நாட்கள் மட்டுமே
என் வலி மறந்து
சிறு குழந்தை போல்
சலனமற்று
பட்டாம்பூச்சியாய்
சந்தோஷ சிறகடித்து
பறந்த நாட்கள்
நீங்காத நினைவாய் என்றும் !
🌹உணவோடு உடையும்
உடையோடு உள்ளத்து
உணர்வுகளையும்
பரிமாறிக் கொண்ட
பாசம் பந்தம் இது !
🌹உரிமையோடு உன்னோடு
சிறு சிறு சண்டையிட்டு
பொறாமையால் அல்ல
உனை இழந்து விடுவேனோ
என்ற பயத்தில்
புரிந்து கொள்வாயா ?
🌹உனை வார்த்தைகளால்
காயப்படுத்திய போது
மனம் துடிக்கும்
தவறுக்குப் பலநூறு
மன்னிப்பு கேட்க
உள்ளம் நினைக்கும்
சில மன்னிப்போடு
வார்த்தை நின்றுவிடும்
மன்னிப்பாயா ?
🌹இடையில் இடையில்
என்னவோ
எனக்கான இடம் உன்னால்
பறிக்கப் பட்டது போல்
தவறான புரிதல் அதுவே
என் முட்டாள்தனத்தின்
மூலகாரணம்
என் தவறான புரிதலை
மன்னித்து மறந்துவிடு
மனமிருந்தால் !
🌹நீ பரிசளித்த பர்சையும்
பத்திரமாய் நம்
நினைவுகளால் நிரப்பி
வைத்துள்ளேன் என்
ஜீவனுள்ள வரை அது
என்னோடு
பொக்கிஷமாய் !
🌹ஏதேதோ நினைவுகள்
எனை வதைக்க
என் உள்ளம்
ஆறுதலாக நீ திட்டிடும்
வார்த்தை கேட்க
என் கைகள்
அலைபேசியில் உனை
அழைத்திடும்
இன்று மட்டுமல்ல
இந்த ஜென்மம் உள்ள வரை !
பிரியாத ப்ரியமுடன்
உன் நட்பு
மனதை கட்டி வைக்கும் சொற்களுக்கு சொந்தக்காரி நீ....
ReplyDeleteஅழவைக்கவும்
அரவணைக்கவும்
உன் சொல்லால்
மட்டுமே
முடியும்....
சிரிக்கவைக்கவும்
சிலிர்க்கவைக்கவும்
உன் சொல்லுக்கு
தெரியும்..
உன்னோடு உறவாடிய
நாட்கள் முப்பது தான்..
ஆனால் என் முப்பது வருட நட்பு பட்டியலில் முதலிடம் உனக்கு தான்...
உன் நினைவுகள்
என்னை புரட்டும் நாட்களில்
உன் புடவை தரும்
உன் வாசமும்
உன் மகளின் நேசமும்...
நேரமிருந்தால் பேசும் நட்பு வட்ட கடிகாரத்தை
உன் வளைகரம் கொண்டு உடைத்துவிட்டு
நேரம் காலம் இல்லாமல் பழகும் புது நட்பு செய்தவளே...
உன் பாசமும்
உன் கோபமும்
உன் பாராட்டும்
உன் பரிசுகளும்
உன் கிளிப்பேச்சும்
உன் பிள்ளைமையும்
உன் விரல்பிடித்து
சுற்றிய பெங்களூர்
வீதிகளும்
உன் தட்டில் பகிர்ந்து கொண்ட பானி பூரியும்
உன்னோடு எடுத்துக் கொண்ட
ஒரு நூறு நிழற்படமும்
உன்னோடு ஆடிப்பாடிய இரவுகளும்
உன்னோடு உறங்காமல் கண்ட கனவுகளும்
உன் புன்னகையும்
உன் சிந்ததனையும்
எனக்காக நீ
சிந்திய
உன் விழிநீரும்
எப்போதும் இருக்கும்
என்னுள்ளே
என் இறுதிவரை...
ஒரேயொரு கோரிக்கை உண்டு நட்பே...
ஒருபோதும் விலகாதே...
உயிருள்ளவரை....
நட்பே
Deleteஉன்
வார்த்தைகளில்
கசிந்து வழியும்
அன்பில்
என் விழியில்
ஆனந்த நீர்
சொட்டுகிறது
இது போதும் எனக்கு
நீ தூரத்தில் இல்லை
என்னருகில் இருந்து
எனைக் கடைத்தேற்றி விடுவாய்
என்ற நம்பிக்கை உண்டு
மீண்டும் நாம் விரல் பிடித்து நடந்த நாட்கள்
வேண்டும் இறைவனிடம் நிதம் என் பிரார்த்தனை இது..
அப்பப்பா மேலே கூறியது கமெண்டா அல்லது தனி Blog ஆ... இனி நான் கூற என்ன இருக்கிறது.... ஜோடி சூப்பர்... இன்று போல என்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன்...😍👌👍✌️
ReplyDeleteநன்றி தங்கள் அன்பு வாழ்த்துக்கு....
Deleteஒற்றுமையோடு பயணிப்போம்
Deleteவாழ்த்துக்கு மிக்க நன்றி ....
அருமையான ஆழமான நட்பு தொடர்ந்து தழைத்தோங்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteஉங்கள் ஆசிர்வாதம்
Deleteநன்றி சகோதரி
நிச்சயம் இணைந்தே பயணிப்போம்... உங்களுடனும் ...
DeleteWow congratulations
ReplyDeleteநன்றி 🙏🙏
Delete