தேசிய காகித பை தினம் ஜீலை 12- 2022

தேசிய காகித பை தினம் ஜீலை 12 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மம்மானியூர், வடமதுரை ஒன்றியம், 
திண்டுக்கல் மாவட்டம்.  
           ஜீலை 12 - 2022  இன்று எம் பள்ளியில் தேசிய காகித பை தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெகிழி பயன்பாட்டால் அன்னை பூமி தொடர்ந்து மாசுபட்டு வருவதையும், அதற்கு மாற்றாக நிச்சயமாக நம்மால் காகித பைகளை பயன்படுத்தி நம்மையும் நம் பூமியையும் பாதுகாக்க முடியும் என்பதை மாணவர்களிடம் சில தகவல்கள் மற்றும் காணொளிகள் மூலம் விளக்கப்பட்டது.  நெகிழி யின் அநாவசியத்தையும் காகித பைகளின் அவசியத்தையும் உணர்ந்து கொண்ட எம் பள்ளி மாணவர்கள் நெகிழி இல்லா பூமியை உருவாக்கும் முயற்சியில் காகித பைகள் தயாரித்து எல்லோரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  
         மாணவர்கள் காகித பை செய்வதற்கு தேவையான அனைத்து 
பொருட்களும் கொடுக்கப்பட்டது. ஆசிரியர் சொல்லச் சொல்ல  மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்தனர். இதில் 7ம் வகுப்பு படிக்கும் இருபது மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வண்ண வண்ண காகிதங்களில் மாணவர்கள் உற்சாகத்துடன் காகித பை செய்ய கற்றுக் கொண்டதோடு 
தங்களின் அழகிய கை வண்ணங்களால் பைகளை அலங்கரித்த விதம் கண்களுக்கு விருந்து அளித்தது. மாணவர்களின் படைப்பாற்றல் திறமை கண்டு வியந்தேன்.  
.     
மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் கூறியது, இதை எங்களின் எழுது பொருட்கள் வைப்பதற்கும், அலங்கார பொருட்கள் வைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்வோம் என்பது. 
       இதை எங்கள் தம்பி மற்றும் தங்கைகளுக்கும் கற்றுக் கொடுப்போம் என்றும் கூறினர்.  
இது போன்ற தினங்களை அனுசரிப்பதன் மூலம் நிச்சயமாக மாணவர்களை நல்ல படைப்பாளர்களாகவும் சமூக சிந்தனை உள்ளவர்களாகவும் மாற்ற முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. 
    
    இப்படி ஒரு நிகழ்வு என் பள்ளியில் நடக்கவும் காகித பை தினத்தில் காகித பை செய்ய கற்றுக் கொள்ளவும் உற்சாகமும் ஊக்கமும் தந்த *நாளை* அமைப்பு நாகப்பட்டினம் மற்றும் அண்ணன் செகுரா அவர்களுக்கும் எம் பள்ளி மாணவர்கள் சார்பாக நெஞ்சம் நிறைந்த நன்றிகள். 

Comments

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)