கவிதை
பறக்க முடியாமல்
என் சிறகுகள் கனக்கும் போதெல்லாம்,
காற்றும் கூட
கிளையசைத்து
தன் உயிர்ப்பை
மெய்ப்பிக்கிறதே
கடலலை கூட
கரை தீண்டித்தீண்டி
தன் இருத்தலை
உணர்த்துகிறதே
இயற்கையின் படைப்பில்
இணையற்றவள் நீயல்லவா
இந்த வரிகள்
மனசின் மர்மக் குழியில்
மெல்ல மெல்ல ஊசலாட
சிறகுகளின் கனம்
கரையக்கரைய
பறக்கிறேன் பருந்தென
மீண்டும்.....
Comments
Post a Comment