தேசிய விவசாயிகள் தினம்
🌾🌾வைகறை விடியலில்
புது நாள் பூபாளராகம்
இசைத்து அழைத்திட
சோம்பல் முறித்து
சட்டென்று எழுந்து
வயலுக்கு விரைபவன்
நம் விவசாயி 🌿🌿🌿
நெல்லோடும் புல்லோடும்
நலம் விசாரித்து
வரப்போடு கதைகள் பேசி
விளைநிலம் இறையென
தொட்டு வணங்கி
வியர்வை காணிக்கை
படைத்து
உளம் மகிழ்பவன்
நம் விவசாயி 🌿🌿🌿
🌾🌾ஊருக்கெல்லாம் உணவளிக்கும்
இவனின் உணவு
சில நேரங்களில்
அரைவயிற்றுக் கஞ்சி
பலநேரங்களில்
முந்தைய நாளின்
நீராகாரத்தோடு
முடிந்து விடும் 🌿🌿🌿
🌾🌾தான் பெற்ற பிள்ளை மறந்து
வளர்ப்பு பிள்ளைகளான
வயல் நாற்றுகளோடு
மொத்த பொழுதையும் கழிப்பதில்
மனம் நிறைபவன்
நம் விவசாயி 🌿🌿🌿
🌾🌾வாடிய பயிரை கண்ட போதெல்லாம்
வாடிய வள்ளலாரின்
பரம்பரையில் வந்தவன் அல்லவா
வாடிய பயிரின்
மனம் அறிந்தவனாய்
நீர் பாய்ச்சி
பாசத்தோடு தலைக்கோதி
தேவை நிறைவு செய்து
நெஞ்சம் நெகிழ்பவன்
நம் விவசாயி 🌿🌿🌿
🌾🌾புயல், வெள்ளம், வறட்சி என் அத்தனைக்கும்
தன் பிள்ளை
தாக்கு பிடித்து நிற்க
தினம் இறையடி
தவறாது தொழும்
நல்லவன்
நம் விவசாயி 🌿🌿🌿
வளர்த்தெடுத்து
அழகிய மாணிக்க மணிகளாக
வளர்த்தெடுத்த விவசாயிக்கு
இதமாய் தலைசாய்த்து
நன்றிப் பா இசைத்திடும்
இந்தக் நெற்கதிர்கள் 🌿🌿🌿
🌾🌾ஆயிரம் அறிவியல்
நம்மை ஆட்கொண்டாலும்
நவீனத்தின் போதைக்குள்
நம்மை தொலைத்தாலும்
உண்ண உணவின்றி
உயிர் கொண்டு
வாழமுடியுமா மண்ணில்?
உழவனின் உன்னதம் போற்றுவோம் !
விவசாயியின் வியர்வை மதிப்போம் !
விவசாயம் போற்றிக் காப்போம்!!!
மிகச் சிறந்த கவிதை தங்கம்...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🙏
Deleteஅருமையான வரிகள், அழகிய நடை, விவசாயியின் உண்மை நிலை, விவசாயத்தின் முக்கியத்துவம். அனைத்தும் மிகச் சிறப்பு...👍👏👏👏👌🌹
ReplyDeleteThank you sir🙏🙏🙏
Deleteஅருமை லோகமணி
ReplyDeleteநன்றி 🙏🙏🙏
Deleteஉழுவுக்கும் தொழிலுக்கும் வந்தனை சிறப்பு....
ReplyDeleteநன்றி தோழி 🌹🌹
Delete👍👍super miss
ReplyDeleteThank you Miss 🙏
DeleteSuper
ReplyDeleteஅருமையான பதிவு லோகமணி.
ReplyDelete