தேசிய விவசாயிகள் தினம்

🌾🌾வைகறை விடியலில் 
புது நாள் பூபாளராகம் 
இசைத்து அழைத்திட  
சோம்பல் முறித்து 
சட்டென்று எழுந்து 
வயலுக்கு விரைபவன் 
நம் விவசாயி 🌿🌿🌿

🌾🌾காலைத் தென்றல் சீராட்ட 
நெல்லோடும் புல்லோடும் 
நலம் விசாரித்து 
வரப்போடு கதைகள் பேசி 
விளைநிலம் இறையென 
தொட்டு வணங்கி 
வியர்வை காணிக்கை 
படைத்து 
உளம் மகிழ்பவன் 
நம் விவசாயி 🌿🌿🌿

🌾🌾ஊருக்கெல்லாம் உணவளிக்கும் 
இவனின் உணவு 
சில நேரங்களில் 
அரைவயிற்றுக் கஞ்சி 
பலநேரங்களில் 
முந்தைய நாளின் 
நீராகாரத்தோடு 
முடிந்து விடும் 🌿🌿🌿

🌾🌾தான் பெற்ற பிள்ளை மறந்து 
வளர்ப்பு பிள்ளைகளான 
வயல் நாற்றுகளோடு 
மொத்த பொழுதையும் கழிப்பதில் 
மனம் நிறைபவன் 
நம் விவசாயி 🌿🌿🌿

🌾🌾வாடிய பயிரை கண்ட போதெல்லாம் 
வாடிய வள்ளலாரின் 
பரம்பரையில் வந்தவன் அல்லவா 
வாடிய பயிரின் 
மனம் அறிந்தவனாய் 
நீர் பாய்ச்சி 
பாசத்தோடு தலைக்கோதி 
தேவை நிறைவு செய்து 
நெஞ்சம் நெகிழ்பவன்  
நம் விவசாயி 🌿🌿🌿

🌾🌾புயல், வெள்ளம், வறட்சி என் அத்தனைக்கும் 
தன் பிள்ளை  
தாக்கு பிடித்து நிற்க 
தினம் இறையடி 
தவறாது தொழும் 
நல்லவன் 
நம் விவசாயி 🌿🌿🌿

🌾🌾தன்னை சுகபத்திரமாய் 
வளர்த்தெடுத்து 
அழகிய மாணிக்க மணிகளாக 
வளர்த்தெடுத்த விவசாயிக்கு 
இதமாய் தலைசாய்த்து 
நன்றிப் பா இசைத்திடும் 
இந்தக் நெற்கதிர்கள் 🌿🌿🌿

🌾🌾ஆயிரம் அறிவியல் 
நம்மை ஆட்கொண்டாலும் 
நவீனத்தின் போதைக்குள் 
நம்மை தொலைத்தாலும் 
உண்ண உணவின்றி 
உயிர் கொண்டு 
வாழமுடியுமா மண்ணில்? 

🌾🌾உழவுக்கு வந்தனை செய்வோம் !
உழவனின் உன்னதம் போற்றுவோம் !
விவசாயியின் வியர்வை மதிப்போம் !
விவசாயம் போற்றிக் காப்போம்!!!



Comments

  1. மிகச் சிறந்த கவிதை தங்கம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் 🙏🙏

      Delete
  2. அருமையான வரிகள், அழகிய நடை, விவசாயியின் உண்மை நிலை, விவசாயத்தின் முக்கியத்துவம். அனைத்தும் மிகச் சிறப்பு...👍👏👏👏👌🌹

    ReplyDelete
  3. அருமை லோகமணி

    ReplyDelete
  4. உழுவுக்கும் தொழிலுக்கும் வந்தனை சிறப்பு....

    ReplyDelete
  5. அருமையான பதிவு லோகமணி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)