குழந்தைகள் தின வாழ்த்து
❣️சிங்கார சிட்டுகளுக்கு இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள் 💐💐
❣️குழந்தைகள் என்றாலே
உள்ளூர ஒரு குதூகலம்
மனசெல்லாம் மகிழ்ச்சி
பூக்கள் பூத்துக் குலுங்கும்
ஆத்மார்த்தமான உலகம்
அலாதியான உலகம் !!
❣️கள்ளங் கபடமற்ற
விருப்பு வெறுப்புக்கு
அப்பாற்பட்டவர்கள்!!
❣️அழகில் தேவதைகளாய்
அன்பின் அர்த்தம்
சொல்ல வந்தவர்கள் !!
❣️ஆனந்தத்தின் முகவரியாய் வந்த
ஆணவமில்லா அதிகாரம் இவர்கள் !!
❣️இதயம் நிறைந்த மன்னவர்களாய்
இன்பத்தின் இலக்கணம்
கற்றுத் தந்தவர்கள் !!
❣️ஈகையில் இவர்கள் போல் இல்லை
ஈடில்லா இம்சை அரசர்களும்
இவர்களே !!
❣️உற்சாகத்தின் பிறப்பிடமாய்
உலகம் போற்றும் உள்ளம்
கொண்ட நாயகர்கள் !!
❣️ஊக்கம் தரும் உத்வேகமாய்
ஊர் போற்றும் உள்ளம்
கொண்டவர்கள் !!
❣️எண்ணத்தில் வண்ணம் கொண்டு
எல்லாமும் ஏற்றம் காண
கனா காணும் காவியங்கள் !!
❣️ஐயம் என்பதை அகராதியில் தகர்த்து
ஐம்பூதங்களின் ஆசி பெற்றவர்கள் !!
❣️ஒற்றுமையின் ஒப்பற்ற உதரணமாக
ஓதுவதில் ஒருநாளும்
சலைத்திடாத தீரர்கள் இவர்கள் !!
❣️நிலவும் பாட்டியை
வெட்ட வெளியில் நின்று
விரல் நீட்டி தொட்டு விடும்
விந்தை மனம்
கொண்டவர்கள் குழந்தைகள் !!
❣️காற்றை கையில் பிடித்து
வண்ணத்துப்பூச்சியின்
வர்ணமெடுத்து
வானவில்லுக்கு வர்ணம் பூசிடும்
விசித்திர மனம்
கொண்டவர்கள் குழந்தைகள் !!
❣️தோழனின் பின் சட்டை பிடித்து
இரயில் வண்டி பயணத்தில்
உலகையே வலம் வர நினைக்கும்
பால் மனம்
கொண்டவர்கள் குழந்தைகள் !!
❣️கல்லோடும் மண்ணோடும்
ஒருநூறு நட்புக் கதைகள்
பேசிப்பேசி குதூகலிக்கும்
குறும்பு மனம்
கொண்டவர்கள் குழந்தைகள் !!
❣️நிஜமாய் சிரித்து
நிஜமாய் அழுது
நிஜங்களுக்குள்ளே வாழும்
சுவாரஸ்யமான நாவல்
இந்த குழந்தைகள்!!
❣️முல்லை மலராய்
வெள்ளை மனம்
வஞ்சகம் இல்லா
பிஞ்சு மனம்!!
❣️தினம் ஒரு பாடம்
சொல்லில் தரும் ஆசான்கள்
வண்ண வண்ண பூக்கள்
வாசம் மிக்க பூக்கள்!!
❣️புன்னகை சொர்க்கம் ஒன்றை
பூமியில் காண வேண்டுமா
வகுப்பறைக்குள் வந்து பாருங்கள்!!
❣️மொகல் தோட்டத்து
வாசமிக்க ரோஜாக்களாய்
வண்ணங்களால்
கண்களுக்கு விருந்தளித்து
வண்டுகளின் ரீங்காரமென
மழலை ததும்பிடும்
கிளிப் பேச்சுக்கள்
மெய் சிலிர்த்து போகலாம்!!
❣️ குழந்தைகளை குழந்தைகளாகவே
பார்ப்போம்; நேசிப்போம் ;
இன்னும் இன்னும் அதிகதிகமாய்!!!!!!
Vera level
ReplyDeleteYes Vera level
Delete