பறவையாய் பறந்த முதல் விமான பயணம்


✈️விமானப் பயணம் 
எப்படி இருக்கும் என்ற 
எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 
பயண அனுபவங்களை 
பாடமாக பலரும் சொல்லிட 
பார்த்து பார்த்து செய்த
முன் தயாரிப்புகள் 
ஏராளம்

✈️எதிர்பார்த்த 
அந்த நாள் 
சிங்கார சென்னையில் 
தாம்பரம் ரயில் நிலையம் 
ஆசையாய் வரவேற்க 
கைகள் சேர்த்துக் கொண்டோம் 
என்னவளும் நானும் 

✈️எங்களுக்கான நட்பு 
தொடங்கி ஓராண்டு காலம் 
கடந்த ஆண்டு அவளோடு 
முதல் சந்திப்பு 
இதே நாளில் தான் 

✈️ஆண்டு ஒன்றை கடந்து விட்டோம் 
நட்பின் ஆழம் கண்டு விட்டோம் 
கடவுள் தந்த மாபெரும் வாய்ப்பு 
அதே நாளில் அவளோடு 
அழகான விமான பயணம் 
இந்த ஆண்டு 

✈️இருவருக்கும் இதுவே 
முதல் விமான பயணம் 
விமான நிலைய 
நுழைவாயில் தொடங்கி 
விமானத்தின் இருக்கை வரையில் 
அத்தனை சரிபார்ப்புகளையும் 
புதுவித அனுபவமாக 
பார்த்து பழகினோம் 

✈️இதோ விமானம் 
மெல்ல மெல்ல 
இறகு அசைத்து  இதமாய் 
தன் ஓடுபாதையில் 
வலம் வந்த காட்சி 
கண்களுக்கு விருந்தானது
 
✈️மேகக் கூட்டங்களுக்கு இடையில் மெல்ல நுழையும்போது 
சுற்றும் இராட்டிணத்தில் 
தலை சுற்ற குதூகலமாய் 
விளையாடிய 
பிள்ளை நாட்களின் 
நினைவலைகளை 
உள்ளுக்குள் அசைபோட்டு
சிரித்துக் கொண்டோம் 

✈️இதோ பறவையாய் 
 நாங்களும் பறக்கிறோம்  
முகிலின் முகடுகளை  
முத்தமிட்டு விட்டு 
மீண்டும் வருவதாய் 
பொய்யுரை கூறி 
கார்மேக கூந்தலாய் 
சில இடங்களில் 
கடல் அலையென 
பல இடங்களில் 
ரம்மியமாய் 
எல்லையின்றி 
வியாபித்து கிடக்கும்
வெண்மேகக் கூட்டங்களிடம் 
விடை பெற்று 
விண்ணில் பறக்கிறோம் 
எழில் மிகு இமய மலையின் 
வடகிழக்கில் 
பச்சை பட்டாடை உடுத்தி 
பாங்காய் நிற்கும் 
அசாம் மாநிலம் நோக்கி...

 ✈️அழகில் 
மெய்சிலிர்த்து நிற்க 
காணும் இடமெங்கும் 
விண்ணை முட்டும் மரங்கள் 
மலைகளுக்குள்ளே 
வளைந்து நெளிந்து செல்லும்
சாலையின் இருபுறமும் 
உள்ளம் கொள்ளை கொள்ளும் 
கண்கவர் காட்சிகள் 

✈️சில்லென்ற சாரலில் 
மெய்சிலிர்க்க 
வந்த எங்களை 
வாரி அணைத்துக் கொண்டது 
வடகிழக்கு RIE எங்களை 
கண்களுக்கும் இதயத்திற்கும் 
கிடைக்கப் போகும் 
பெருவிருந்திற்காய் 
உறங்கா விழிகளுடன் 
நாங்கள்.......
















Comments

  1. உங்கள் உங்கள் இருவரின் நட்பு பயணம், வெற்றிப் பயணம் இரண்டும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வெற்றிப்பயணங்கள் தொடரட்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)