புத்தாண்டே வருக !! வருக!!
🌺🌺🌺கருங்குயில் கானம் பாட
புல்லாங்குழல் பூபாளம் இசைக்க
எழில்மிகு மயிலினங்கள் நடனமாட
வண்ணம் கொண்ட பட்டாம்பூச்சிகள்
சிங்கார சிறகசைக்க
கொட்டும் பனிமழையிலும்
மலைச் சாரல் மெல்ல வந்து தாலாட்ட
கடலைகள் அள்ளி அணைத்திட
ஆதவன் கதிர் வீசி அழைத்திட
குழந்தைகள் குதூகலமாய்
ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்திட
இயற்கை அன்னையின்
இன்பமான அழைப்பினில்
இதமாய் மகிழ்ந்திருக்க
உனை வாழ்த்தி வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺பழையன கழிதலும்
புதியன புகுதலும்
என்பதில் எள்ளளவும் ஐயமின்றி
பழைய சிந்தனைகள் களைந்து
புதிய சிந்தனைகள்
எங்களில் பிறந்திட
மனசெல்லாம் மத்தாப்பு பூக்கள் பூக்க
மனதார உன்னை வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺மதங்கள் கடந்து
மனங்களை நேசிக்கும்
மானிட பண்பு இங்கு பெருகி
திரும்பும் திசையெங்கும்
மனித நேயம் மலர்ந்திட
மகிழ்வோடு உன்னை
வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺இல்லாமை இல்லாத நிலை
இங்கு உருவாகிட
பகிர்வதே பண்பு
தருவதே இன்பம்
கொடுப்பதே அன்பு
என எல்லோரும் ஓரினமாகிட
சமத்துவம் இங்கு சரிசமமாகிட
சந்தோஷ கீதங்களால்
உனை வாழ்த்தி வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺நேற்றைய காயங்கள்
இன்று ஆறப்போவதில்லை
இன்றைய காயங்கள்
இப்படியே இருந்து விடவும் போவதில்லை
காலம் மாறும்; காயம் ஆறும்
கவலை மறந்து
புது நம்பிக்கை கொண்டு
புது வாழ்வு தொடங்கிட
எங்கள் உள்ளங்களில்
புத்துணர்ச்சி தந்திட
உன்னை விரும்பி வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺கடந்த ஆண்டில்
கடந்து வந்த கடினமான பாதைகள்
கற்றுக் கொண்ட பாடங்கள்
அத்தனையுமே
புத்தாண்டுக்கான
வழித்துணையாக அமைந்திட
நேர்மறை எண்ணங்களால்
எங்களை வளர்த்திட
வழிகாட்டியாய் உன்னை
வணங்கி வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக!!!வருக!!!💐💐💐
🌺🌺🌺கொரானாவின்
கோரத்தில் சிக்கி
பணத்தோடு பிழைப்பும்
உறவுகளோடு உயிர்களும்
இழந்து நிற்கும்
மக்கள் மனங்களில்
கவலை கரைத்து
கண்ணீர் துடைத்து
வரும் காலம் வளமாகும் என்ற
நம்பிக்கை நாற்றை விதைத்திட
நன்றியோடு வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺கொரானாவின் பாதிப்பில்
இன்னமும் மீண்டிடாத நிலையில்
ஒமைக்கிரான் வடிவில்
புதிதாய் ஒரு பீதி
உள்ளம் உருக்குலைத்திட
தினம் ஒரு பயத்தோடு
வாழும் மக்களுக்கு
பயமற்ற , கலக்கமற்ற
நிம்மதியான வாழ்வை
தந்திட வேண்டி உன்னை
வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺புயல், வெள்ளம் என
இயற்கையின் கோபம் வதைக்காமலிருக்க
உலக உயிர்கள் எல்லாம்
இன்புற்று இருக்க
இயற்கையை
இன்னும் இன்னும்
அதிகதிமாய் நாங்கள்
நேசித்து பாதுகாக்க
எங்களை நீ வழிநடத்திட
உள்ளன்போடு உன்னை
வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக வருக !!! 💐💐💐
🌺🌺🌺நோய்நொடியின்றி
சீரோடும் சிறப்போடும்
வளமோடும் நலமோடும்
எல்லோரும் வாழ்ந்திட
சமத்துவமும் சகோதரத்துவமும்
தினமும் புலர்ந்திட
எல்லாம் வல்ல இறைவனின்
ஆசிரை வாரி வழங்கிட
முல்லை மலராய்
முகம் மலர்ந்து
உள்ளத்தில் உற்சாகம்
ஊற்றெடுக்கு உன்னை
மகிழ்வோடு
வரவேற்கிறோம்
புத்தாண்டே வருக!!! வருக!!!
புத்தாண்டே வருக!!!வருக!!! 💐💐💐
அருமையான கவிதை லோகு
ReplyDeleteநன்றி 🙏🙏🙏
Deleteஇயற்கையின் விலங்கினங்கள், பழையன கழிதல், மதங்கள் கடந்த ஒற்றுமை, இல்லாமை இயலாமை, நம்பிக்கை புத்துணர்ச்சி, நோயின்மை, முல்லை மலராய் எதிர்காலம் மலர்ந்திட... என பல தலைப்புகளை கவிதை நடையில் விளக்கியது சிறப்பு...👌👏👏👏👏👍😍🌷🌼🌹🌺🌻
ReplyDeleteநன்றி நட்பே🙏🙏💐💐
Delete