என் செல்ல மகளுக்கு.....
மகள்கள் ❣️ தின வாழ்த்துகள் 💐💐
என் அன்பு மகளுக்கு
மகள்கள் தின வாழ்த்துகள்...
❣️எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை
வரமாய் ஒருத்தி
எனக்கு வாய்த்தாள்
மகளெனும் வரமாய் !!!!!
❣️புத்தம் புதிதாய் பூத்த பூ இவள்
வாடா மலராய் வந்த வசந்தம் இவள்
புன்னகைமாறா பூ மகள் இவள்
❣️பகலில் பகலவனின் ஒளி இவள்
இரவில் வெண்ணிலாவின்
பிரகாசம் இவள்
என் வாழ்வின்
அர்த்தமாய் வந்தவள் இவள்
❣️ஐந்து வருடங்கள்
மருத்துவத்தோடு போராட்டமா
விதியோடு போராட்டமா
தெரியவில்லை
போராட்டங்கள் பல கடந்து
நான் பெற்றெடுத்த
பொக்கிஷம் இவள்!!!!
❣️என் செல்ல மகள் பிறந்தாள்
எங்கள் வீட்டு மகாலஷ்மியாய் !!!
அதனாலே அவளுக்கு
மகாலஷ்மி என்று பெயரிட்டேன்
❣️பாசத்தில் இவள் போல்
எவரும் இல்லை
என் வீட்டு இளவரசியும் இவளே!!!
என் மனம் ஆளும்
மகாராணியும் இவளே!!!
❣️உன் அழுகுரல் கேட்கும் முன்னே
உனை அள்ளி அணைத்து
அமுதூட்டிய நாட்கள்
நீங்காத நினைவுகளாய்....
❣️தட்டுத்தடுமாறி நீ எழுகையில்
மெல்ல சறுக்கிய உன் கால்களால்
பூமித்தாய் பூரித்து நின்றாள்
உன் பூவிதழ் முத்தம்
பெற்றதையெண்ணி.......
❣️விதியின் வழியில்
உன்னைப் பிரிந்த
ஓராண்டு காலம்
தவறவிட்ட தருணங்களாய்
எனை ரணமாக்கிய காலம்
உன் பாசம் எனை
கட்டி இழுத்திட உன்னோடு
மீண்டும் பயணம்
என் வாழ்வின்
வளர்ச்சிகள் அத்தனையுமே
நீ பிறந்த பின் தானே
என் தேவதையே !!!!
❣️பசித்திருக்கும் பொழுதுகளில்
பந்தியும் வைப்பாள் இவள் !!!
வேலைப்பளு கொண்ட நேரத்தில்
பகிர்ந்தும் கொள்வாள் இவள் !!!
❣️ஆண்டுகள் பல தவமிருந்து
வரமாய் வந்தவள்
வாஞ்சையும் தந்தவள்
என் அன்னை எட்டி இருக்க
அன்னையாய் அருகிருந்து
அன்பு செய்யும்
அழகு இராட்சசி இவள் !!!
❣️என் தோள் கடந்து
வளர்ந்து நிற்கும் இவள்
என் வயிற்றின் கருமணி !
என் உயிரின் கண்மணி !
❣️நடை கற்றுத் தந்த எனக்கு
உடை வாங்கித் தந்த எனக்கு
அடையாளமாய் அவள் அளிக்கும்
அன்பு முத்தங்கள்
ஆகப் பெரும் பரிசு
❣️அம்மா என்று நீ அழைக்கும்
ஒற்றை வார்த்தைக்கு
ஆயுள் கைதியடி - நான்
❣️பொன் சேர்க்கக் தேவையில்லை
பொருள் சேர்க்கக் தேவையில்லை
பொன்மகளே!!!! உனை
ஊர்ப் போற்ற வளர்ப்பதே
தவமென வாழ்கிறேன்
என் செல்லமே!!!
❣️உன் விடுமுறை நாளில்
என் பள்ளி நாளில்
என் தாயாய் நீ மாறி
உன் குழந்தையாய்
எனை பள்ளிக்கு அனுப்பிடும்
சுகத்தை தினம் தினம்
யாசிக்கிறேன்
என் பூங்கிளியே!!!!
❣️அன்னையெனும் பதவி தந்த
அற்புதம் நீ எனக்கு
பிள்ளையாய் மாறும் போது
பெரும் வரம் நீ எனக்கு
கொஞ்சி மகிழும் போது
அலைகடல் நீ எனக்கு
அள்ளி அணைத்திடும் போது
தென்றலடி நீ எனக்கு
❣️ஒருநாள் என்னைவிட்டு
உன் அகம் செல்வாய் நீ
ஒரு கணமும் உனைப் பிரியாது
என் உயிர்நாடி தங்கமகளே!!!!
❣️உன் நிழலாய் இருப்பேன்
உன் வழியாய் இருப்பேன்
உன் வசந்தமாய் இருப்பேன்
❣️ மகிழ்ந்திரு
என் செல்ல மகளே!!!!
வாழ்வெல்லாம் வசந்தங்கள்
உனை சூழ்ந்திட
வாழ்த்துக்கள்
என் உயிரானவளே!!!!!.........💐💐💐
மகள்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே கிடைத்த பெருவரம் இந்த அன்பு... கொடுத்துவைத்தவள் தோழி நீ...
ReplyDeleteநன்றி தோழி. எனைக் கடந்து அவள் அதிகம் நேசிப்பது உன்னையே
Delete🌹🌹அம்மா &மகள் ❤❤வாழ்க. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நட்பே
ReplyDeleteஅருமை
ReplyDeleteநன்றி என் இனிய தோழியே
Deleteஅம்மா & மகள்என்றும் அன்புடன் இருக்க வாழ்த்துக்கள்
Deleteவாழ்த்துக்கு
Deleteமிக்க நன்றி 🙏
அம்மக்களால் மட்டுமே உணர முடியும் தாய்மையின் பெருமையை அழகாய் வார்த்தைப்படுத்தியிருகாய் சகோதரி. உன்னைப் போல் உன் மகளும், உன் மகள் போல் உன் கவியும் அழகு. சந்தோஷங்களும், மனநிறைவும் வாழ்வில் எப்போதும் பெற்றிட மனதார வாழ்த்துகிறேன்.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி 🙏🙏
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி 🙏
Deleteஅருமை..அருமை நட்பே
ReplyDeleteநன்றி. மிக்க மகிழ்ச்சி
DeleteBelated wishes...
ReplyDeleteNice to see ur feel as words.
Wish u happy life of whole life...
Thankyou so much for your wishes sir🙏🙏
Deleteஅருமை
ReplyDeleteமிக்க நன்றி 🙏
Deleteஅருமையான வரிகள்👏👏💐
ReplyDeleteமிக்க நன்றி 🙏
DeleteSuper ma
ReplyDeleteValga valamudan MAHALAKSHMI
MANY MORE HAPPY RETURNS OF THE DAY DEAR
BY B.SARADHA MEENA
நன்றி Teacher 🙏🙏🙏
Deleteமிக மிக சிறப்பு மிக்க கவிதை இது.
ReplyDeleteஅம்மாவே மகளாய் பிறந்த ஒரு வாரம் உங்களுக்கு கிடைத்துள்ளது. வாழ்த்துக்கள்
மிக்க நன்றி 🙏🙏🙏
Deleteகவிதை மிகவும் அருமை..
ReplyDelete