சாவித்திரி பாய் புலே ஒரு சரித்திரம்
பாரதத் தாயின் கருவினில்
மராட்டிய மண்ணில் - மானிட
மகத்துவம் காக்க பிறந்த மாதவமே !
சாதியத்தின் உச்ச காலமது
குழந்தை மணத்தின் கொடூரமது
விதி உன்னையும் விடவில்லை
அகவை ஒன்பதில் தாரமானாய்
12வயது பாலகன்
ஜோதிராவ் புலேவுக்கு
பார்ப்பனர்களின் ஆதிக்கம்
அரங்கேற்றம்
கண்ட வேளையில்
தெய்வம் தந்த பொக்கிஷம் -உன்
ஜோதிராவ் புலே
கல்வியால் மட்டுமே சமூகம்
தலைநிமிருமென
ஊருக்கு உணர்த்திட
எத்தனை தலைகுனிவு -என்
இனமக்களை எப்படியேனும்
கடைத்தேற்றுவேனென்று
வீறுகொண்டதற்கே துரத்தப்பட்டாய்
வீட்டிலிருந்து
கத்திமுனையில் கணவனைக்
கொண்டபோதும் கலங்கிடா
உன் தைரியம்
உன் மீது வீசப்பட்ட கல், மண், மலம்
எல்லாம் உனக்கு மகுடம்
சரித்திரம் சாட்டாத
ஒத்துழையாமை இயக்கம் நீயே!
உன்னை
சமூகப் போராளி என்பதா?
பெண்ணியத்தின் பெருமை
என்பதா?
குழந்தை மணத்தின்
முற்றுப் புள்ளி நீயென்பதா?
விதவை மறுவாழ்வின்
வித்தகி என்பதா?
கருக்கலைப்பின் கண்டிப்பு
நீயென்பதா?
எத்துனை அவதாரங்கள்!
தத்துப் பிள்ளை யஷ்வந்த் ராவ்
மட்டுமல்ல உன் வாரிசு - உம்மால்
திறக்கப்பட்ட பள்ளி
ஒவ்வொன்றும்
உன் பேர் சொல்லும் வாரிசு
இந்தியாவின் முதல் பெண்
ஆசிரியரும் நீயே!
முதல் பெண் தலைமை
ஆசிரியரும் நீயே!
மராட்டியம் தந்த முதல்
பெண் கவியும் நீயே!
காலம் வென்ற முற்போக்கு
நாயகியும் நீயே!
கல்வியை ஆயுதமாக்கி
. பெண்ணிய உயர்வில்
சமூகம் உயர்த்திய சாதனையே!
உயிர் கொள்ளும் பிளேக்கின்
கோரதாண்டவத்தில்
பிறர் உயிர் காக்க -- உன்
உயிர் ஈந்த அன்னையே!
உன் சேவையை என்னவென்று
சொல்வேன்
இந்திய அறியாமைக்கு
முற்றுப் புள்ளி வைத்திட
அறிவொளி எனும் ஜோதி ஏற்றிட
உன் கரம் பற்றி நடத்திட்ட
ஜோதி ராவ் புலேவின் கழுத்திற்கு
மாலைகள் உன் சாதனைகள்!
பூவினும் மெல்லிய உன் மனம்
அடக்குமுறைக்கு எதிரே
புயலானது
தேனினும் இனிய உன் வார்த்தை
அநீதிக்கு எதிரே திமிரவும்
செய்தது
ஆசிரிய வாழ்வுக்கு இலக்கணம்
வகுத்துச் சென்ற உன் பிறப்பை
ஆசிரிய தினமாக விழா எடுக்காதது
வரலாற்றுப் பிழையே!
எங்கள் பிழையே!
நீர் வாழ்ந்த வாழுகின்ற
வீரமண்ணில் -- நானும்
பெண் ஆசிரியராய்
உன் வழிதனை பின்பற்றி
சமுகத்தின் தரம் உயர்த்திட
பெண்ணிய பெருமை காத்திட
ஆசிர் வேண்டி நிற்கிறேன்
தாயே!
கண்களில் ததும்பும் நீர் சொல்லும் உன் வரிகளில் நான் உணர்ந்த அன்னை சாவித்திரியின் வலிகளை... அவர் நமக்கு அமைத்த வழிகளை....
ReplyDeleteஆம் நட்பே அவர் வழியில் பயணிப்போம்
Deleteஅருமையான வரிகள்! ஆசிரியராக நாம் இருப்பதால் ஒன்றும் பயனில்லை .ஆசிரியராக நாம் வாழ சான்றாகிய அவர் வழி நடப்போம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நிச்சயம் அருள் புரிவார்.வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றி சகோதரி. அவர் காட்டிய பாதையில் செல்வோம்.
Deleteசரித்திர நயகி சாவித்திரி பாயின் சாதனைகளையும் அவர் அடைந்த சோதனைகளையும் சொல்லிய போதனைகளையும் அழகிய சொற்களை மாலையாக தொடுத்து மனதில் பதித்தாய் உங்கவிதையில். அருமை கவியே வாழ்க உன்புலமை.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி தோழியே
DeleteThis comment has been removed by the author.
DeleteIn a best way u portrayed her life as a poem. It makes the reader to understand her life in brief. Good poetic flow and it inspires the reader. It creates an inspiration. You penned her biography in a great manner. Fantabulous...👌✌️
ReplyDeleteExcellent ..., I was jealous on your poetic rhyming ,If you will possible copy Rights give ap,This poet dedicate to ap people
ReplyDeleteI don't know Tamil,but I understood little bit,this poet specially dedicated to rie bengalore.. superb lyrics...keep it up mam
ReplyDeleteThank you sir
Delete