உலக பூமி தினம் ஏப்ரல் 22
🌱அனுதினமும் உம் துதி சொல்ல
வேண்டிய நாங்கள்
வருடத்தில் ஒரு நாள்
உமை நினைக்க ஏப்ரல் 22
🌷 நீ தந்த இயற்கையின்
இன்பத்தில் திளைத்திட இந்த
ஒரு ஜென்மம் போதாது
🌷ஈரைந்து மாதங்கள் மட்டுமே
என் அன்னையின் கருவில்
வாழ்நாளின் மிச்ச காலமெல்லாம்
உன் மடி மீது தானே பூமா தேவியே!
🌷 ஒன்றா இரண்டா ஒரு கோடி
நன்மைகள் அல்லவா! நீ தந்தது
🌷நிலையில்லா உலகில்
நிஜமில்லா பொழுதுகளில் நான்
நிற்பது நடப்பதும் _ நீ என்னைத்
தாங்குவதால் தானே தரணித்தாயே!
என வாழ்வுக்கு இலக்கணம் தந்த
வள்ளுவருக்கு வரிகள் தந்தாயே!
🌷உறவுகளோடு உள்ளம் மகிழ
சுவாசம் தந்தாயே!
🌷 அடுக்கு மாடிகளில் ஆடம்பரமாய்
வாழ ஆயுள் தந்தாயே!
அத்தனையும் மறந்தோம்
பூமித்தாயே !
🌱நவீனமாகிப்போன நாகரிகத்தில் நெகிழியால் உன் நெஞ்சில்
உதைத்தோம்
🌱குப்பைகளால் உன்
குறுக்கொடித்தோம்
🌱வேதிக்கழிவுகளால் உன்
வேரறுக்க நினைத்தோம்
🌱பணமே எல்லாமும் ஆன கலிகாலத்தில் - நீ
கற்றுக் கொடுத்த பண்புகளை
மறந்தோம்!
🌱மனித மனம் குறுகி
உனைத் துண்டாடும் போது
உள்ளம் உருக்குலைந்திடும்
புவித்தாயே!
🌱அகிலமே ஆண்டாலும்,
அடங்கப்போவது என்னவோ
உன் ஆறடிக்குள் தானே!
மன்னித்து விடும் மகத்துவமே!
🌱என் வரும் தலைமுறை காத்திட
உன் அருமை உணர்ந்து
மரங்களால் உனை அலங்கரித்து
மாசற்ற பூமி காத்திடுவோம்!
Very nice
ReplyDeleteSuper 👌 👍
ReplyDelete👌👌👌💐💐💐
ReplyDelete