ஆசிரிய முகமூடி அகற்றி- என் வாசிப்பு அனுபவம்

     "உண்மை ஆசிரியன் இவன் 
         கற்று கொடுக்க நினைக்காமல் 
              கற்க வாய்ப்பு தந்தவன் 
          பாடம் நடத்தமால் - நாளும் 
                பாடம் படித்தவன் 
            மாணவனின் மனம் புரிந்தவன் 
             சிந்தனைக்கு சிறகு தந்தவன் 
        வேண்டும் ஆசான் - இவன் போல் 
                சமூகம்  வளர்ந்திட 
        உண்மை ஆசான் இவன் 
   இவனது சிந்தனையை 
             உள்வாங்கிய என் 
                ஆசிரியப் பயணம்"..... 
 முன்னுரை: 
        வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான். வாசிப்பும் சுவாசிப்பும்  நிதானமாக இருக்க வேண்டும்.  வாசிப்பு மொழி வளத்தைப் பெருக்கும். அதே சமயம் பொது அறிவையும் வளர்த்து கொள்ள முடியும். ஆசிரிய முகமூடி அகற்றி எனும் நூலின் என் வாசிப்பு அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். 
    இந்நூலின்  ஆசிியர் ச. மாடசாமி. 
நூலின் முதற் பதிப்பு: மே, 2014. இரண்டாம் பதிப்பு: ஏப்ரல் 2017.   
  வாசிப்பு அனுபவம்: 
        கற்று கொள்ள தயாராக இருப்பவர்கள் தான் ஆசிரியர்கள். மாணவர்களிடம் இருந்து தினம் தினம் பாடம் கற்ற ஓர் ஆசிரியர் தான் பிராங்க் மக்கோர்ட்.  மக்கோர்ட்  
எனும் அமெரிக்க பள்ளி ஆசிரியரைப் பற்றி அமைந்த அற்புதமான புத்தகம் இது. 
      ‌மக்கோர்டின் வகுப்பறை அனுபவங்கள் வித்தியாசமானவை. கற்பனைக்கு களம் அமைத்துத் தந்த வகுப்பறை. வண்ணத்துப்பூச்சிகளுக்கு மேலும் வர்ணம் பூசிய வகுப்பறை. கற்றுக் கொள்ள வயது தடையல்ல. பாதங்கள் நடக்கத் தயாரானால் பாதைகள் முடிவதில்லை என்பதில் தெளிந்தவராய் 60வயதைக் கடந்த பின் தன் வகுப்பறை சுவாரஷ்யங்களை மெல்ல மெல்ல அசைபோட்டிருக்கும் விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இவர் தன் வகுப்பறை அனுபவங்களை TEACHER MAN என்ற நூலாக வடித்த போது வயது 75. 
     முகமூடி இல்லா எழுத்து. நேர்மையையும் தைரியத்தையும் பேனாவின் மையாக ஊற்றி வரைந்த எழுத்து. கள்ளும் முள்ளும் நிறைந்த கடினப் பாதையை கடந்தவராய் வகுப்பறை பயணத்தில் கால் பதித்தவர். 
      வன்முறை மிகுந்த வகுப்பறை. கூச்சலிட்டு சண்டையிட்டு கட்டுப்பட மறுக்கும் காட்டாற்று வெள்ளமாய் ஓடும் விடலைகளின் வகுப்பறை தான் மக்கோர்டின் வகுப்பறை. பேட்டி என்ற மாணவன் தூக்கி எறிந்த சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டு விட்டு, I ate the sandwich‌ என்று எழுதியது என்னை வெகுவாக கவர்ந்தது. ஆசிரிய- மாணவர் ஒற்றுமையின் முதல் அனுபவம் இது. 
       அமெரிக்காவைப் போல கலவையான வகுப்பறை. வெவ்வேறு நாட்டு மாணவர்கள், பசி நிறைந்தவர்கள், உற்சாகம் நிறைந்தவர்கள், சவாலானவர்கள் மற்றும் இறுக்கமானவர்கள் நிறைந்த வகுப்பறை. கற்பிப்பது அல்ல தன் முதல் வேலை சமாளிப்பது தான் ‌என்பதை உணர்ந்தவராய்  கதையாக தன் கற்பித்தல் பயணத்தை தொடங்கிய விதம் என்னை நெகிழ வைத்தது. 
         நிர்வாகம் வலுக்கட்டாயமாக தந்த ஆசிரிய முகமூடியை கழற்றி விட்டு தன் சொந்த முகத்தையே காட்டிய விதம் என்னை சிந்திக்க வைத்தது. நிறைய புத்தகங்களை வாசித்து வாசிப்பின்  வேலிக்குள் நின்று விடாமல் வேலி தாண்டி யோசித்து மாணவனுக்கு கற்பனை சிறகு விரிக்க கற்றுக் கொடுத்த மக்கோர்டின் சிந்தனைக்குள் நானும் ‌புதைந்து விட்டேன்.  
        மக்கோர்டின் வகுப்பறை பெரும்பாலும் திட்டமிடாத நெகிழ்வான வகுப்பறை. திட்டமிட்ட வகுப்பறை பாதுகாப்பானது. செருப்பணிந்த கால்களை போன்றது.  அந்த கால்களில் இறக்கைமுளைப்பது அபூர்வம்.
       நான் அறியாத பல படிப்புகளை எனக்கு கற்றுக் கொடுத்தது என் மாணவர்கள் என்று வர்ணம் பூசாமல் உண்மைக் கையால் எழுதிய விதம் என் நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்தது.
     ‌உண்மை ஆசிரியரின் பலம் சுயவிமர்சனம். வெற்றியின் போது இது சரியான வெற்றியா என்று தனக்குள் கேள்வி கேட்பதும், தோல்வியின் போது இதில் தன் தவறு என்ன என்று தேடிப் பார்ப்பதும் மிகச் சிறந்த ஆசிரியரின் பண்பு என்பதை உணர்த்தியது ஆசிரிய முகமூடி அகற்றி எனும் இந்நூல். 
முடிவுரை 
       ஓர் ஆசிரியர், என்று கற்றுத் தருவதை நிறுத்தி கற்றுக் கொள்ள களம் அமைத்துத் தருகிறாரோ அன்று மாணவன் விருப்பத்தோடு கற்றுக் கொள்கிறான். இனி என் பயணம் கூட இந்நூலின் வழியில்.....

Comments

  1. அருமையான நூல் அறிமுகம் .தங்கள் பாதை செழிக்க வாழ்த்துக்கள் இளம் ஆசிரியரே!

    ReplyDelete
  2. This is a very interesting and truthful history of an inspiring teacher. Every teacher must read this book. It clarifies the real relationship between the student and teacher. It's wonderful and worthy of reading such a book and sharing ur feelings...mam

    ReplyDelete
  3. I can see an eminent writer in you ma... You can present a great vision on teaching... Am sure you will create some miracle for the welfare of your students and society. I believe you... The content rocked.... Am happy that this book is in th most opt hand. Well done darling.

    ReplyDelete
    Replies
    1. Thanks a million Varunani. Always be with me dear ur my booster. I feel very proud to have u as my best friend. No more words to say ya. If u be with me I can achieve.

      Delete
  4. Good description about that book. You explained the essence of that book in a crystal clear way. This inspires me to read that book. Good job. All the best.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Report of my Exploratory Research

My experience during this pandemic situation

GRADATION ON ENGLISH TEXT BOOKS OF CLASS III(TAMILNADU)